LyricFront

Vaarum Theiva Aavi Vaarum

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
வாரும் தெய்வ ஆவி வாரும் எங்கள் ஆத்துமத்திலே எங்களுக்குயிரைத் தாரும் வாரும் சுத்த ஆவியே உம்முடன் வெளிச்சமும் சீரும் ஜீவனும் வரும்.
Verse 2
எங்கள் நெஞ்சிலே நற்புத்தி தெய்வ பயமும் வர அதை நீர் குணப்படுத்தி தப்பு நினைவாகிய யாவையும் அதில் நீரே நீக்கும் தெய்வ ஆவியே.
Verse 3
மோட்சத்தின் வழியைக் காட்டி சகல தடையையும் நீக்கி எங்களைக் காப்பாற்றி நல்லோராக்கியருளும் கால் இடறிற்றேயாகில் துக்கம் தாரும் மனதில்.
Verse 4
நாங்கள் தெய்வ மைந்தரென்று நீரே தீங்கு நாளிலும் சாட்சி தந்ததிரைவென்று நெஞ்சைத் தேற்றியருளும் தெய்வ அன்பின் தண்டிப்பு எங்களுக்கு நல்லது.
Verse 5
எங்களைப் பிதாவிடத்தில் முழுபக்தியோடேயும் சேரப்பண்ணி ஆத்துமத்தில் நீரும் கூப்பிட்டேயிரும் அப்போ கேட்டது வரும் நம்பிக்கையும் பெருகும்.
Verse 6
மனசெங்களில் கலங்கி ஸ்வாமி எந்த மட்டுக்கும் என்று கெஞ்சும் போதிரங்கி அதை ஆற்றிக்கொண்டிரும் நிற்கவும் தரிக்கவும் நீர் சகாயராய் இரும்.
Verse 7
ஆ நிலைவரத்துக்கான சத்துவத்தின் ஆவியே பேயின் சூதுக்கெதிரான ஆயுதங்களை நீரே தந்து நாங்கள் நித்தமும் வெல்லக் கட்டளையிடும்
Verse 8
விசுவாசத்தை அவிக்க சத்துருக்கள் பார்க்கவே அதை நீர் அதிகரிக்க செய்யும் தெய்வ ஆவியே நாங்கள் பொய்யைப் பார்க்கிலும் தெய்வ வாக்கை நம்பவும்.
Verse 9
சாகும் காலம் வந்தால் நாங்கள் நித்திய மகிழ்ச்சியாய் வாழப்போகும் மோட்சவான்கள் என்றப்போ விசேஷமாய் நிச்சயத்தை நெஞ்சிலே தாரும் நல்ல ஆவியே.
Verse 10
வேறு வசனம் வாரும் தெய்வ ஆவி வாரும் எங்கள் ஆத்துமத்திலே எங்களுக்குயிரைத் தாரும் வாரும் சுத்த ஆவியே ஞான தீபம் ஸ்வாமி நீரே ஏற்றுமே
Verse 11
எங்கள் நெஞ்சில் நல்ல புத்தி தெய்வ பக்தி தோன்றவே அதை நீர் குணப்படுத்தி தப்பு சிந்தை யாவுமே மாற்ற வாரும் நல்ல தெய்வ ஆவியே
Verse 12
மோட்ச மார்க்கத்தைக் குறித்து எவ்வகைத் தப்பெண்ணமும் நீக்கி எங்களைத் தற்காத்து நல்லோராக்கியருளும் கால் தள்ளாடில் பெலம் ஈந்து தாங்கிடும்
Verse 13
நெஞ்சு எங்களில் கலங்கி நாயனே இரட்சியும் என்று கெஞ்சும் போதிரங்கி ஆற்றித் தேற்றிக் கொண்டிரும் துன்பம் நீங்க நீர் சகாயராய் இரும்
Verse 14
வாரும் தெய்வ ஆவி வாரும் எங்கள் ஆத்துமத்திலே எங்களுக்குயிரைத் தாரும் வாரும் சுத்த ஆவியே உம்முடன் வெளிச்சமும் சீரும் ஜீவனும் வரும்.
Verse 15
எங்கள் நெஞ்சிலே நற்புத்தி தெய்வ பயமும் வர அதை நீர் குணப்படுத்தி தப்பு நினைவாகிய யாவையும் அதில் நீரே நீக்கும் தெய்வ ஆவியே.
Verse 16
மோட்சத்தின் வழியைக் காட்டி சகல தடையையும் நீக்கி எங்களைக் காப்பாற்றி நல்லோராக்கியருளும் கால் இடறிற்றேயாகில் துக்கம் தாரும் மனதில்.
Verse 17
நாங்கள் தெய்வ மைந்தரென்று நீரே தீங்கு நாளிலும் சாட்சி தந்ததிரைவென்று நெஞ்சைத் தேற்றியருளும் தெய்வ அன்பின் தண்டிப்பு எங்களுக்கு நல்லது.
Verse 18
எங்களைப் பிதாவிடத்தில் முழுபக்தியோடேயும் சேரப்பண்ணி ஆத்துமத்தில் நீரும் கூப்பிட்டேயிரும் அப்போ கேட்டது வரும் நம்பிக்கையும் பெருகும்.
Verse 19
மனசெங்களில் கலங்கி ஸ்வாமி எந்த மட்டுக்கும் என்று கெஞ்சும் போதிரங்கி அதை ஆற்றிக்கொண்டிரும் நிற்கவும் தரிக்கவும் நீர் சகாயராய் இரும்.
Verse 20
ஆ நிலைவரத்துக்கான சத்துவத்தின் ஆவியே பேயின் சூதுக்கெதிரான ஆயுதங்களை நீரே தந்து நாங்கள் நித்தமும் வெல்லக் கட்டளையிடும்
Verse 21
விசுவாசத்தை அவிக்க சத்துருக்கள் பார்க்கவே அதை நீர் அதிகரிக்க செய்யும் தெய்வ ஆவியே நாங்கள் பொய்யைப் பார்க்கிலும் தெய்வ வாக்கை நம்பவும்.
Verse 22
சாகும் காலம் வந்தால் நாங்கள் நித்திய மகிழ்ச்சியாய் வாழப்போகும் மோட்சவான்கள் என்றப்போ விசேஷமாய் நிச்சயத்தை நெஞ்சிலே தாரும் நல்ல ஆவியே.
Verse 23
வேறு வசனம் வாரும் தெய்வ ஆவி வாரும் எங்கள் ஆத்துமத்திலே எங்களுக்குயிரைத் தாரும் வாரும் சுத்த ஆவியே ஞான தீபம் ஸ்வாமி நீரே ஏற்றுமே
Verse 24
எங்கள் நெஞ்சில் நல்ல புத்தி தெய்வ பக்தி தோன்றவே அதை நீர் குணப்படுத்தி தப்பு சிந்தை யாவுமே மாற்ற வாரும் நல்ல தெய்வ ஆவியே
Verse 25
மோட்ச மார்க்கத்தைக் குறித்து எவ்வகைத் தப்பெண்ணமும் நீக்கி எங்களைத் தற்காத்து நல்லோராக்கியருளும் கால் தள்ளாடில் பெலம் ஈந்து தாங்கிடும்
Verse 26
நெஞ்சு எங்களில் கலங்கி நாயனே இரட்சியும் என்று கெஞ்சும் போதிரங்கி ஆற்றித் தேற்றிக் கொண்டிரும் துன்பம் நீங்க நீர் சகாயராய் இரும்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?