LyricFront

Valla Yesu Kristhu Naatha

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
வல்ல இயேசு கிறிஸ்து நாதா நல்ல நேசமீட்பர் நீர்; பற்று பாசம் கட்டு முற்றும் அற்றுப்போகப்பண்ணுவீர்.
Verse 2
அருள் ஜோதி தோன்றிடாமல் இருள் மூடிக் கிடந்தோம்; திக்கில்லாமல் பாவப் பற்றில் சிக்கிக்கொண்டே இருந்தோம்.
Verse 3
பக்தி ஒன்றுமில்லை பாரும் சக்தியற்றுப் போயினோம்; ஜீவ பாதை சென்றிடாமல் பாவ பாதை நடந்தோம்.
Verse 4
இயேசு நாதரே இப்போது நேசமாக நிற்கிறீர்; என்னை நம்பு பாவம் நீக்கி உன்னைக் காப்பேன் என்கிறீர்.
Verse 5
நம்பி வந்து பாவ நாசா உந்தன் பாதம் அண்டினோம்; தூய ரத்தம் பாயக் கண்டு தீய செய்கை வெறுத்தோம்.
Verse 6
பாவச் சேற்றிலே விழாமல் தேவரீரே காத்திடும்; வல்ல ஆவியாலே என்றும் வெல்லச்செய்து ரட்சியும்.

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?