LyricFront

Vallamai Arul Niraive

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
வல்லமை அருள் நிறைவே வாரும் பின்மாரி பொழிந்திடுமே தேவ ஆவியே தாகம் தீருமே வல்லமையால் இன்று எமை நிரப்பிடுமே
Verse 2
புது எண்ணெய் அபிஷேகம் புது பெலன் அளித்திடுமே நவ மொழியால் துதித்திடவே வல்லமை அளித்திடுமே - வல்லமை
Verse 3
சத்திய ஆவியே நீர் நித்தமும் நடத்திடுமே முத்திரையாய் அபிஷேகியும் ஆவியின் அச்சாரமாய் - வல்லமை
Verse 4
அக்கினி அபிஷேகம் நுகத்தினை முறித்திடுமே சத்துருவை ஜெயித்திடவே சத்துவம் அளித்திடுமே - வல்லமை
Verse 5
தூய நல் ஆவிதனை துக்கமும் படுத்தாமல் தூயவழி நடத்திடவே பெலன் தந்து காத்திடுமே - வல்லமை
Verse 6
பெற்ற நல் ஆவிதனை காத்திட வரம் தாரும் ஆவியினால் நடந்திடவே ஆளுகை செய்திடும்
Verse 7
உலர்ந்திடும் எலும்புகளும் உயிர்பெற்று எழும்பிடவே எழுப்புதலை கண்டிடவே வல்லமை அளித்திடுமே

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?