LyricFront

Varavenum Enatharasae

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
வரவேணும் எனதரசே மனுவேல், இஸ்ரேல் சிரசே அருணோதயம் ஒளிர் பிரகாசா அசரீரி ஒரே சரு வேசா
Verse 2
வேதா கருணாகரா மெய்யான பராபரா ஆதார நிராதரா அன்பான சகோதரா தாதாவும் தாய் சகலமும் நீயே நாதா, உன் தாபரம் நல்குவாயே – வரவேணும்
Verse 3
படியோர் பவ மோசனா, பரலோக சிம்மாசனா முடியாதருள் போசனா, முதன் மாமறை வாசனா இடையர் குடிலிடை மேவி எழுந்தாய் இமையவர் அடி தொழு மேன்மையின் எந்தாய் – வரவேணும்
Verse 4
வானோர் தொழும் நாதனே, மறையாகம போதனே கானாவின் அதீதனே, கலிலேய வினோதனே ஞானாகரமே, நடு நிலை யோவா நண்பா, உனத நன்மையின் மகா தேவா! – வரவேணும்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?