LyricFront

Vazhthukiren Yesu Raja

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
வாழ்த்துகிறேன் இயேசு ராஜா வாழ்த்துகிறேன் இக்காலையிலே
அற்புதமாய் இரா முழுவதும் அடியேனைக் காத்தீரே
Verse 2
உமது செட்டை நிழலதிலே படுத்திருந்தேன் இரா முழுவதும் உமது கரம் அணைத்திடவே ஆறுதலாம் நித்திரையும் - வாழ்த்து
Verse 3
நித்திரையை இன்பமாக்கிப் பத்திரமாய் இருதயத்தைச் சுத்தமான இரத்தத்திற்குள் சுத்தமாக வைத்திருந்தீர் - வாழ்த்து
Verse 4
பலவிதம் சோதனைகள் எமைச் சூழ வந்திருந்தும் ஒன்றும் எனை அணுகாமல் அன்புடனே பாதுகாத்தீர் - வாழ்த்து
Verse 5
சந்திப்பீர் இக்காலைதனில் தந்திடவே திருவரங்கள் சந்தோஷமாய்ப் பகல் முழுவதும் ஆவிக்குள் யான் பிழைக்க
Verse 6
தந்திடுவீர் அபிஷேகம் புதிதாக இப்புவி நாளில் நடத்திடுவீர் ஆவியினால் உமது திருசித்தமதில்
Verse 7
பாவமேதும் அணுகாமல் பரிசுத்தமாய் பாதை செல்ல தேவையான சரிவாயுதங்கள் தாரும் ஜெப ஆவியுடன்
Verse 8
படைக்கிறேன் என் இருதயத்தை பலிபீடத்தில் முற்றுமாக கண்களுடன் செவியோடு வாயும் கையும் காலுமாக
Verse 9
நேசரே உம் திருவருகை இந்நாளில் இருந்திடினும் ஆசையுடன் சந்திக்கவே ஆயத்தமாய் வைத்துக்கொள்ளும்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?