LyricFront

Vin Kireedam Pera Porukku

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
விண் கிரீடம் பெறப் போருக்குக் கிறிஸ்தேசு செல்கின்றார்; அவரின் வெற்றிக் கொடிக்குக் கீழாகப் போவோன் யார்? தன் துக்கப் பாத்ரம் குடித்துச் சோராமல் நிற்போன் யார்? தன் சிலுவையை எடுத்து அவர் பின் செல்வோன் யார்?
Verse 2
முதலாம் ரத்த சாட்சியாய் மரித்தோன் வானத்தில் கர்த்தாவை விசுவாசமாய்க் கண்ணோக்கித் துன்பத்தில் கொலைஞர்க்காக வேண்டிட சண்டாளரால் மாண்டான்; பகைஞர்க்காக ஜெபிக்க யார் அவர் பின் செல்வான்?
Verse 3
தெய்வாவி வந்து தங்கின ஈராறு சீஷர்கள் மகத்வமாய் விளங்கின நம்பிக்கை யுள்ளோர்கள் தீ துன்பம் வாளைச் சகித்தே சிங்கத்தால் பீறுண்டார்; மரிக்கவும் அஞ்சாமலே அவர்போல் செல்வோர் யார்?
Verse 4
சிறந்த சேனா வீரராய்க் கெம்பீரக் கூட்டத்தார் சிங்காசனத்தைச் சூழ்ந்தோராய்க் கொண்டாடி நிற்கிறார்; எப்பாடும் நீங்கி மோட்சத்தைச் சேர்ந்தோர்போல் நாங்களும் உம்மிடம் சேர அருளை கர்த்தா கடாட்சியும்.

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?