LyricFront

Yen Jeevan Pogum Neram

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
என் ஜீவன் போகும் நேரம் சமீபம் வந்ததே ; பேரின்ப அருணோதயம் இதோ! விடிந்ததே ; ராக் கால மோசம் நீங்கும் வின் சுடரொளியில் ; மா அருள் ஜோதி வீசும் பேரின்ப தேசத்தில்.
Verse 2
ஆ நேச ஜீவ ஊற்று என் அருள் நாதரே ! ஈண்டுண்ணும் ஜீவ தண்ணீர் அங்காழி போலாமே ; பேரன்பின் பெருவெள்ளம் பாய்ந்தோடும் மோட்சத்தில் ; மா அருள் ஜோதி வீசும் பேரின்ப மோட்சத்தில்;
Verse 3
அன்போடும் நீதியோடும் என் சுக துக்கமும் ஆண்டென்னைப் பாதுகாத்து வந்தார் எந்நேரமும் ; ஆ! போற்றுவேன் தெய்வன்பை ஆனந்த கடலில் ; மா அருள் ஜோதி வீசும் பேரின்ப தேசத்தில் .
Verse 4
நல் நித்திரை செய்து பின்பு மாசற்றெழும்புவேன் ; ன் மீட்பரை நான் கண்டு ஆனந்தம் அடைவேன் ; ராஜாதி ராஜன் என்னை அழைக்கும் நேரத்தில் மா அருள் ஜோதி வீசும் பேரின்ப தேசத்தில் .
Verse 5
தன் ஆடையைப் பாராமல் பர்த்தாவின் முகத்தை பத்தினி நோக்குமாறு நான் ஜீவ கீரடத்தை நோக்காமல் மீட்பர் மாண்பை பார்ப்பேன் அவ்வேளையில் ; இம்மானுவேலே ஜோதி பேரின்ப தேசத்தில்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?