LyricFront

Yen Paavathin Nivarthiyai

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
என் பாவத்தின் நிவர்த்தியை உண்டாக்க அன்பாய் ஜீவனை கொடுத்து சிலுவையிலே மரித்த தெய்வ மைந்தனே
Verse 2
அநேக பாவம் செய்தோனாய் மா ஏழையும் நசலுமாய் ராப்போஜனத்துக்கு வரும் அடியேனைத் தள்ளாதேயும்
Verse 3
நீர் பாவியின் இரட்சகர் நீர் யாவையும் உடையவர் நீர் பரிகாரி நீர் எல்லாம் குணம் வரும் உம்மாலேயாம்.
Verse 4
ஆகையினால் என் இயேசுவே குணம் அளியும் என்னிலே அசுத்தமான யாவையும் நிவர்த்தியாக்கியருளும்
Verse 5
இருண்ட நெஞ்சில் ஒளியும் மெய்யான விசுவாசமும் தந்து என் மாம்ச இச்சையே அடங்கப்பண்ணும் கர்த்தரே.
Verse 6
நான் உம்மில் வானத்தப்பமே மகா வணக்கத்துடனே புசித்தும்மை எக்காலமும் நினைத்துக்கொண்டிருக்கவும்
Verse 7
நான் இவ்விருந்தின் நன்மையால் சுத்தாங்கனாய்ப் பிதாவினால் மன்னிப்பைக் கிருபையையும் அடைய அருள் புரியும்.
Verse 8
என் இயேசுவே நான் பண்ணின நல் நிர்ணயம் பலப்பட பிசாசை ஓட்டியருளும் தெய்வாவி என்னை ஆளவும்
Verse 9
உமக்கே என்னை யாவிலும் நீர் ஏற்றோனாக்கியருளும்; தினமும் எனக்கும்மிலே சுகம் அளியும் கர்த்தரே.
Verse 10
நான் சாகும்போதென் ஆவியை மோட்சானந்தத்தில் உம்மண்டை சேர்த்தென்னை உம்மால் என்றைக்கும் திருப்தியாக்கியருளும்.

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?