Verse 1இயேசு என்னோடு இருப்பத நெனச்சிட்டா
என்னுள்ளம் துள்ளுதம்மா
நன்றி என்று சொல்லுதம்மா
ஆ...ஆ...ஓ...ஓ... லலல்லா - லாலா ம்ம்
Verse 2கவலை கண்ணீரெல்லாம்
கம்ப்ளீட்டா மறையுதம்மா
பயங்கள் நீங்குதம்மா
பரலோகம் தெரியுதம்மா
அகிலம் ஆளும் தெய்வம் - என்
அன்பு இதய தீபம்
Verse 3பகைமை கசப்பு எல்லாம்
பனிபோல மறையுதம்மா
பாடுகள் சிலுவை எல்லாம்
இனிமையாய் தோன்றுதம்மா
Verse 4உலக ஆசை எல்லாம்
கூண்டோடே மறையுதம்மா
உறவு பாசமெல்லாம்
குப்பையாய் தோன்றுதம்மா
Verse 5எரிகோ கோட்டை யெல்லாம்
இல்லாமல் போகுதம்மா
எதிர்க்கும் செங்கடல்கள்
இரண்டாய் பிரியுதம்மா