Verse 1இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்
எனக்கென்ன ஆனந்தம்
Verse 2எந்தன் வாலிப காலமெல்லாம்
எந்தன் வாழ்க்கையின் துணையானார்
உம் நாமமே தழைத்தோங்க
நான் பாடுவேன் உமக்காக
Verse 3எந்தன் இதயமே உம்மைப் பாடும்
எந்தன் நினைவுகள் உமதாகும்
Verse 4பெரும் தீமைகள் அகன்றோட
பொல்லா மாயைகள் மறைந்தோட
உமதாவியின் அருள் காண
வரும் காலங்கள் உமதாகும்
Verse 5இந்த உலகத்தை நீர் படைத்தீர்
எல்லா உரிமையும் எனக்களித்தீர்
உம் நாமமே தழைத்தோங்க
நான் பாடுவேன் உமக்காக
Verse 6இயேசு எங்கள் வாழ்வின் பெலனானார்
எங்களுக்கென்ன ஆனந்தம்