Yesu Krishthuve Ulagathile
Song: Yesu Krishthuve Ulagathile
Verse 1இயேசு கிறிஸ்துவே
உலகத்திலே
கெட்டுப்போனவருக்கான
ஒளியும் உயிருமான
ரட்சகர் நீரே
இயேசு கிறிஸ்துவே.
Verse 2என்னை மீட்க நீர்
ஜீவனை விட்டீர்
குற்றத்தை எல்லாம் குலைக்க
என்னைத் தீமைக்கு மறைக்க
எனக்காக நீர்
ஜீவனை விட்டீர்.
Verse 3எங்கள் மீட்புக்கு
லோகத் தோற்றத்து
நாளின் முன்னே வார்த்தை தந்தீர்;
காலமாகையில் பிறந்தீர்
பாவிகளுக்கு
மீட்புண்டாயிற்று.
Verse 4வெற்றி வேந்தரே
பாவம் சாபம் பேய்
நரகத்தையும் ஜெயித்தீர்;
நாங்கள் வாழ நீர் மரித்தீர்;
உம்மால் துஷ்டப் பேய்
வெல்லப்பட்டதே.
Verse 5மா இராஜாவே
பணிவுடனே
தேவரீருக்குக் கீழ்ப்பட்டு
உமது மொழியைக் கற்று
அதை நெஞ்சிலே
வைப்பேன் இயேசுவே.