Verse 1இயேசுகிறிஸ்து என் ஜீவன்
சாவது ஆதாயமே
வாழ்வது நானல்ல இயேசு என்னில் வாழ்கின்றார்
Verse 2இயேசுவை நான் எற்றுக் கொண்டேன்
அவருக்குள் நான் வேர் கொண்டேன்
அவர் மேல் எழும்பும் கட்டடம் நான்
அசைவதில்லை தளர்வதும் இல்லை
Verse 3என்ன வந்தாலும் கலங்கிடாமல்
இடுக்கண் நேரம் ஸ்தோத்தரிப்பேன்
அறிவைக் கடந்த தெய்வீக அமைதி
அடிமை வாழ்வின் கேடயமே
Verse 4எனது ஜீவன் கிறிஸ்துவுடனே
தேவனுக்குள்ளே மறைந்தது
ஜீவன் கிறிஸ்து வெளிப்படும் நாளில்
மகிமையில் நான் வெளிப்படுவேனே
Verse 5கிறிஸ்துவுக்குள்ளே இரத்தத்தினாலே
பாவ மன்னிப்பின் மீட்படைந்தேன்
அவரை அறியும் அறிவிலே வளர்வேன்
அவரின் விருப்பம் செய்தே மகிழ்வேன்