Verse 1இயேசு நாதா! காக்கிறீர்
இளைப்பாறச் செய்கிறீர்
மோசம் நேரிடாமலும்
பாதம் இடறாமலும்
என்னைத் தாங்கி நிற்கிறீர் ;
நேச நாதா காக்கிறீர்.
Verse 2வாரிபோன்ற லோகத்தில்
யாத்திரை செய்து போகையில்
சூறைக்காற்று மோதினும்
ஆழி கோஷ்டமாயினும்
அமைதல் உண்டாக்குவீர் !
நேச நாதா காக்கிறீர் !
Verse 3சற்று தூரம் செல்லவே
மோட்ச கரை தோன்றுமே !
துன்பம் நீங்கி வாழுவேன் ;
இன்பம் பெற்று போற்றுவேன் ;
அதுமட்டும் தாங்குவீர் ;
நேச நாதா காக்கிறீர் .
Verse 1Yesu naadhaa! kaakkireer
Izhaippaara seikireer
Mosam neridaamalum
Paadham idaraamalum
Ennai thaangi nirkireer;
Nesa naadhaa kaakkireer.
Verse 2Vaari pondra logaththil
Yaaththirai seidhu pogaiyil
Sooraikkaatru modhinum
Aazhi koshtamaayinum
Amaithal undaakkuveer!
Nesa naadhaa kaakkireer!
Verse 3Satru dhooram sellave
Motcha karai thondrume!
Thunbam neengi vaazhuven;
Inbam petru potruven;
Adhumattum thaanguveer;
Nesa naadhaa kaakkireer.
Download Song