Verse 1இயேசுராஜா உம் இதயத் துடிப்பை
அறித்து கொள்ளும் பாக்கியம் தாரும்
உம் ஏக்கம் எல்லாம் நிறைவேற்ற
கிருபையைத் தாரும்
ஒரு வாழ்வு அது உமக்காக - (2)
உணர்வெல்லாம் உமக்காக
உள்ளமெல்லாம் உமக்காக
Verse 2உம் இதயம் மகிழ்ந்திட வாழ்ந்திட வேண்டும்
உம் சித்தம் செய்து நான் மடிந்திட வேண்டும்
Verse 3அழிந்து போகும் ஆத்துமாக்கள் நனைத்திட
வேண்டும்
ஆத்தும பாரத்தினால் அலைந்திட வேண்டும்
Verse 4உலகத்திற்கு மரித்து நான் வாழ்ந்திட வேண்டும்
உண்மையான ஊழியனாய் உழைத்திட
வேண்டும்
Verse 5அகிலத்தையே உம் அண்டை சேர்த்திட
வேண்டும்
அனைத்து மகிமை உமக்கே நான் செலுத்திட
வேண்டும்