Verse 1இயேசு ராஜா வந்திருக்கிறார்
எல்லோரும் கொண்டாடுவோம்
கைதட்டி நாம் பாடுவோம்
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
கவலைகள் மறந்து நாம் பாடுவோம்
Verse 2கூப்பிடு நீ பதில் கொடுப்பார்
குறைகளெல்லாம் நிறைவாக்குவார்
உண்மையாக தேடுவோரின்
உள்ளத்தில் வந்திடுவார்
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
Verse 3மனதுருக்கம் உடையவரே
மன்னிப்பதில் வள்ளலவர்
உன் நினைவாய் இருக்கின்றார்
ஓடிவா என் மகனே(ளே)
Verse 4கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
கரம் பிடித்து நடத்திடுவார்
எண்ணமெல்லாம் எக்கமெல்லாம்
இன்றே நிறைவேற்றுவார்
Verse 5நோய்களெல்லாம் நீக்கிடுவார்
நோடிப்பொழுதே சுகம் தருவார்
பேய்களெல்லாம் நடுநடுங்கும்
பெரியவர் திரு முன்னே - நம்ம
Verse 6பாவமெல்லாம் போக்கிடுவார்
பயங்களெல்லாம் நீக்கிடுவார்
ஆவியினால் நிரப்பிடுவார்
அதிசயம் செய்திடுவார்
Verse 7கசையடிகள் உனக்காக
காயமெல்லாம் உனக்காக
திருஇரத்தம் உனக்காக
திருந்திடு என் மகனே