Verse 1இயேசு ராஜன் வந்துவிட்டார் - நாம்
கூடும் இந்த இடத்திலே
ஒசன்னா ஒசன்னா (2)
Verse 2இருளான உன்வாழ்வுதான்
இப்போ வெளிச்சமாகவே மாறுதே
இயேசுவின் பேரொளி நம்மேல் வீச
எழும்பி ஜொலித்திடுவோம
Verse 3சாத்தானை ஜெயித்த யேசுதான்
நம்மில் உலாவிக் கொண்டு இருக்கிறார்
நோய்களும் பேய்களும் சாபங்களெல்லாம்
பயந்து ஓடிடுதே
Verse 4அந்தகார வல்லமை முறித்திட
ஆவியானவர் இறங்கி இருக்கிறார்
கர்த்தரின் கரத்தால் கட்டுகளெல்லாம்
அறுக்கப்படுகிறதே
Verse 5ஆவியின் வல்லமை நம்மிலே
இப்போ அளவில்லாமலே ஊற்றுகிறார்
அனைலாய் நாழும் கொழுந்துவிட்டெறிய
அக்கினி இறங்கிடுதே
Verse 6ஆசீர்வதிக்கும் கரங்களே
நம் சிரசின் மேலே அமருதே
நன்மையும் கிருபையும் சுகழும்பெலனும்
பாய்ந்து வருகின்றதே
Verse 7துதிகளின் நடுவில் வசிப்பவர்
இப்போ நமக்குள்ளே வந்து இருக்கிறார்
ஒரு மனமாய் நாம் ஆவியில் நிறைந்து
கர்த்தரை துதித்திடுவோம