Verse 1இயேசு ஸ்வாமி உமது
வசனத்தின் பாலைத் தேட
வந்தோம்; எங்கள் மனது
மண்ணைவிட்டு உம்மைச் சேர
எங்கள் சிந்தையை நீர் முற்றும்
தெய்வ சொல்லுக்குட்படுத்தும் .
Verse 2உமதாவி யெங்களில்
அந்தகாரத்தை அறுத்து
ஒளியை வீசிராகில்
புத்திக் கண்ணெல்லாம் இருட்டு ;
சீர் உண்டாக்கும் நற்சிந்திப்பு
உம்முடைய நடப்பிப்பு .
Verse 3மகிமையின் ஜோதியே
ஸ்வாமி நாங்கள் மாயமற
பாடிக் கெஞ்சி நெஞ்சிலே
வசனத்தைக் கேட்டுணர
வாய் செவி மனமும் கண்ணும்
திரவுண்டுபோகப் பண்ணும்.
Verse 1Yesu swaami umathu
vasanathin paalaith theda
vanthom; engal manathu
mannai vittu ummaich sera
engal sinthaiyai neer muttrum
deiva sollukkutpaduththum.
Verse 2Umathaavi yengalil
anthakaaraththai aruththu
oliyai veesiraagil
buththik kannellaam iruttu;
seer undaakkum narsinthippu
ummutaiya nadappippu.
Verse 3Magimaiyin jothiye
swaami naangal maayamara
paadik kenji nenjile
vasanaththaik kettunara
vaai sevi manamum kannum
thiravundupogap pannum.
Download Song