Verse 1இயேசு சுவாமி உம்மண்டை
சிறு பிள்ளைகளும் வர
வேண்டுமென்றீர் மோட்சத்தை
இச்சிறியருக்குந் தரச்
சித்தமானதால் இப்பிள்ளை
தாமதிக்க ஞாயம் இல்லை.
Verse 2நீர்தாம்; மீண்டும் ஒருவன்
தண்ணீராலும் ஆவியாலும்
பிறவாவிட்டால் அவன்
மோட்சத்தில் எவ்வித்த்தாலும்
உட்ப்ரவேசிக்கலாகாது
என்றுரைத்ததுந் தப்பாது.
Verse 3ஆகையாலே உமது
கட்டளைக்குக் கீழடங்கி
வந்தோம். இந்தப் பிள்ளைக்குத்
தயவைக் காண்பித்திரங்கி
நாம் உன்நேசரென்று சொல்லும்
இதை அன்பாய் ஏற்றுக்கொள்ளும்.
Verse 4ஜென்ம பாவியாகிய
இதைக் கழுவி மன்னியும்
நீர் இதற்குப் புதிய
வஸ்திரத்தைத் தரிப்பியும்;
கர்த்தரே நீர் இதை முற்றும்
நன்றாய் உமக்குட்படுத்தும்.
Verse 5தெய்வ நாமங் கூடிய
இம்முழுக்கின் பலத்தாலே
பேயின் விஷமாகிய
பாவ ரோகமும் அத்தாலே
வந்த சாவும் நீங்கலாக
இது குணமாவதாக.
Verse 6கூட்டிக்கொள்ளும் சிரசே;
மேய்ப்பரே இவ்வாட்டைச்சேரும்;
உயிர்ப்பியும் ஜீவனே;
ஸ்வாமி பேயின் நாற்றைப்பேரும்;
நேசரே நற்கொடியாக
இதும்மில் தரிப்பதாக.
Verse 7எங்கள் அன்பின் வேண்டலை
ஸ்வாமி அன்பாய்க்கேட்பீராக.
நாங்கள் வேண்டிக்கொள்வதை
இப்பிள்ளைக்குச் செய்வீராக
நீரே இதன் நாமத்தையும்
மீட்புக்கென்றெழுதிவையும்.