Verse 1இயேசு உமதைந்துகாயம்
நோவும் சாவும் எனக்கு
எந்தப் போரிலும் சகாயம்
ஆறுதலுமாவது;
உம்முடைய வாதையின்
நினைவு என் மனதின்
இச்சை மாளுவதற்காக
என்னிலே தரிப்பதாக.
Verse 2லோகம் தன் சந்தோஷமான
நரக வழியிலே
என்னைக் கூட்டிக்கொள்வதான
மோசத்தில் நான் இயேசுவே
உமது வியாகுல
பாரத்தைத் தியானிக்க
என் இதயத்தை அசையும்
அப்போ மோசங்கள் கலையும்.
Verse 3எந்தச் சமயத்திலேயும்
உம்முடைய காயங்கள்
எனக்கநுகூலம் செய்யும்
என்பதே என் ஆறுதல்;
ஏனெனில் நீர் எனக்கு
பதிலாய் மரித்தது
என்னை எந்த அவதிக்கும்
நீங்கலாக்கி விடுவிக்கும்.
Verse 4நீர் மரித்ததால் ஓர்க்காலும்
சாவை ருசிபாரேனே;
இதை முழு மனதாலும்
நான் நம்பட்டும் இயேசுவே;
உமது அவஸ்தையும்
சாவின் வேதனைகளும்
நான் பிழைக்கிறதற்காக
எனக்குப் பலிப்பதாக.
Verse 5இயேசு உமதைந்துகாயம்
நோவும் சாவும் எனக்கு
எந்தப் போரிலும் சகாயம்
ஆறுதலுமாவது;
முடிவில் விசேஷமாய்
என்னை மீட்ட மீட்பராய்
என்னை ஆதரித்தன்பாக
அங்கே சேர்த்துக்கொள்வீராக.