Verse 1இயேசு உயிர்த்தெழுந்ததால்
சாவின் பயம் அணுகாது
உயிர்த்தெழுந்தார் ஆதலால்
சாவு நம்மை மேற்கொள்ளாது
அல்லேலூயா!
Verse 2உயிர்த்தெழுந்தார்! மரணம்
நித்திய ஜீவ வாசல் ஆகும்
இதினால் பயங்கரம்
சாவில் முற்றும் நீங்கிப்போகும்
அல்லேலூயா!
Verse 3உயிர்த்தெழுந்தார்! மாந்தர்க்காய்
ஜீவன் ஈந்து மாண்டதாலே
இயேசுவை மா நேசமாய்
சேவிப்போம் மெய் பக்தியோடே
அல்லேலூயா!
Verse 4உயிர்த்தெழுந்தார்! பேரன்பை
நீக்கமுடியாது ஏதும்
ஜீவன் சாவிலும் நம்மை
அது கைவிடாது காக்கும்
அல்லேலூயா!
Verse 5உயிர்த்தெழுந்தார்! வேந்தராய்
சர்வ லோகம் அரசாள்வார்
அவரோடானந்தமாய்
பக்தர் இளைப்பாறி வாழ்வார்
அல்லேலூயா!