இயேசு எங்கள் மேய்ப்பர்
கண்ணீர் துடைப்பார்;
மார்பில் சேர்த்தணைத்து
பயம் நீக்குவார்;
துன்பம் நேரிட்டாலும்
இன்பம் ஆயினும்
இயேசுவின் பின் செல்வோம்
பாலர் யாவரும்.
Verse 2
நல்ல மேய்ப்பர் சத்தம்
நன்றாய் அறிவோம்
காதுக்கின்பமாக
கேட்டுக் களிப்போம்
கண்டித்தாலும் நேசர்
ஆற்றித் தேற்றுவார்;
நாங்கள் பின்னே செல்ல
வழி காட்டுவார்.
Verse 3
ஆட்டுக்காக மேய்ப்பர்
ரத்தம் சிந்தினார்;
அதில் மூழ்கினோரே
தூயர் ஆகுவார்;
பாவ குணம் நீக்கி
முற்றும் ரட்சிப்பார்;
திவ்விய தூய சாயல்
ஆக மாற்றுவார்.
Verse 4
இயேசு நல்ல மேய்ப்பர்
ஆட்டைப் போஷிப்பார்;
ஓநாய்கள் வந்தாலும்
தொடவே ஒட்டார்
சாவின் பள்ளத்தாக்கில்
அஞ்சவே மாட்டோம்
பாதாளத்தின் மேலும்
ஜெயங்கொள்ளுவோம்.