Verse 1இயேசு எந்தன் நேசரே
கண்டேன் வேத நூலிலே
பாலர் அவர் சொந்தந்தான்
தாங்க அவர் வல்லோர்தான்.
Verse 2இயேசு என் நேசர்
இயேசு என் நேசர்
இயேசு என் நேசர்
மெய் வேத வாக்கிதே.
Verse 3என்னை மீட்க மரித்தார்
மோட்ச வாசல் திறந்தார்
எந்தன் பாவம் நீக்குவார்
பாலன் என்னை ரட்சிப்பார்.
Verse 4பலவீனம் நோவிலும்
என்றும் என்னை நேசிக்கும்
இயேசு தாங்கித் தேற்றுவார்
பாதுகாக்க வருவார்.
Verse 5எந்தன் மீட்பர் இயேசுவே
தாங்குவார் என்னருகே;
நேசனாய் நான் மரித்தால்
மோட்சம் சேர்ப்பார் அன்பினால்.