Yesuvai Nambenor Maandathillai
Song: Yesuvai Nambenor Maandathillai
Verse 1இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை
என்னென்ன துன்பங்கள் நேரிட்டாலும்
சிங்கத்தின் வாயினின்றும் இரட்சிப்பார்
பங்கம் வராதென்னை ஆதரிப்பார்
Verse 2நெஞ்சமே நீ அஞ்சிடாதே
நம்பினோரைக் கிருபை சூழ்ந்திடுதே
இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்
இன்னமும் காத்துன்னை நடத்துவார்
Verse 3விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்
வறட்சி மிகுந்த காலத்திலும்
பக்தன் வலது பாரிசத்திலே
கர்த்தர் தாம் நிற்பதால் அசைந்திடான்
Verse 4இயேசுவின் நாமத்தில் ஜெயம் பெற்றே
ஏகிப் பறந்திடும் பக்தரோடே
சேர்ந்தென்றும் வாழ்ந்திடும் ஐக்கியத்திலே ஜெய
கெம்பீரமே எனக்குண்டே
Verse 5ஏழை உன் ஆத்துமா பாதாளத்தில்
என்றும் அழிந்திட விட்டுவிடார்
தம் சமூகம் நித்ய பேரின்பமே
சம்ப ர்ண ஆனந்தம் பொங்கிடுமே
Verse 6அங்கே அநேக வாசஸ்தலங்கள்
அன்பின் பிதா வீட்டில் ஜொலிக்குதே நேர்த்தியான
இடங்களில் உந்தன்
நித்திய பங்கு கிடைத்திடுமே
Verse 7நாசியில் சுவாசமுள்ள மாந்தரை
நம்புவதல்ல தம் ஆலோசனை
கோர பயங்கர காற்றடித்தும்
கன்மலை மேல் கட்டும் வீடுநிற்கும