Verse 1இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாரையும் இப்பூவினில்
இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை
Verse 2பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில்
நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே
மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன்
Verse 3சம்பூரண அழகுள்ளோர் என்னை மீட்டுக் கொண்டீரே
சம்பூரணமாக என்னை உந்தனுக்கீந்தேன்
Verse 4எருசலேம் குமாரிகள் எத்தனை வளைந்தோராய்
உம்மில் உள்ள எந்தன் அன்பை நீக்க முயன்றார்
Verse 5லோக சுக மேன்மையெல்லாம் எந்தனை கவர்ச்சித்தால்
பாவ சோதனைகளெல்லாம் என்னை சோதித்தால்
Verse 6நீர்மேல் மோதும் குமிழிபோல் மின்னும் ஜடமோகமே
என் மேல் வந்து வேகமாக மோதியடித்தால்
Verse 7தினந்தோறும் உம்மில் உள்ள அன்பு என்னில் பொங்குதே
நேசரே நீர் வேகம் வந்து என்னைச் சேருமே