Verse 1இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்
அவர் இரத்தத்தாலே கழுவப்பட்டவன்
எனக்கென்று எதுவுமில்ல
இப்பு மி சொந்தமில்ல
எல்லாமே இயேசு.....என் இயேசு
எல்லாம் இயேசு இயேசு இயேசு
Verse 2பரலோகம் தாய் வீடு
அதைத் தேடி நீ ஓடு
ஒருவரும் அழிந்து போகமலே
தாயகம் வர வேண்டும் தப்பாமலே
Verse 3அந்தகார இருளினின்று
ஆச்சரிய ஒளிக்கழைத்தார்
ஆழைத்தவர் புண்ணியங்கள் அறிவித்திட
அடிமையை தெரிந்தெடுத்தார் - இந்த
Verse 4பாடுகள் அநுபவிப்பேன்
பரலோக தேவனுக்காய்
கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் நாளில்
களி கூர்ந்து மகிழ்ந்திருப்பேன் - நான்
Verse 5இலாபமான அனைத்தையுமே
நஷஷ்டமென்று கருதுகின்றேன்
இயேசுவை அறிகின்ற தாகத்தினால்
எல்லாமே இழந்து விட்டேன் - நான்
Verse 6பின்னானவை மறந்தேன்
முன்னானவை நாடினேன்
என் நேசர் தருகின்ற பரிசுக்காக
இலக்கை நோக்கித் தொடருகின்றேன்
Verse 7நீதியை விரும்புகிறேன்
அக்கிரமம் வெறுக்கிறேன்
அனந்த தைல அபிஷேஷகத்தால்
அனுதினம் நிரம்புகிறேன்