Yesuve Kalvariyil Ennai Vaithuku
Song: Yesuve Kalvariyil Ennai Vaithuku
Verse 1யேசுவே! கல்வாரியில்
என்னை வைத்துக் கொள்ளும்
பாவம் போக்கும் ரத்தமாம்
திவ்ய ஊற்றைக் காட்டும்
Verse 2மீட்பரே! மீட்பரே!
எந்தன் மேன்மை நீரே!
விண்ணில் வாழுமளவும்
நன்மை செய்குவீரே
Verse 3பாவியேன் கல்வாரியில்
ரட்சிப்பைப் பெற்றேனே
ஞான ஜோதி தோன்றவும்
கண்டு ப+ரித்தேனே
Verse 4ரட்சகா! கல்வாரியின்
காட்சி கண்டோனாகப்
பக்தியோடு ஜீவிக்க
என்னை ஆள்வீராக
Verse 5இன்னமும் கல்வாரியில்
ஆவலாய் நிற்பேனே
பின்பு மோட்ச லோகத்தில்
என்றும் வாழுவேனே