Yesuve Kirubasana Pathiye Ketta
Song: Yesuve Kirubasana Pathiye Ketta
Verse 1யேசுவே, கிரு பாசனப்பதியே, கெட்ட
இழிஞன் எனை மீட்டருள்,
ஏசுவே, கிரு பாசனப்பதியே.
Verse 2காசினியில் உன்னை அன்றி, தாசன் எனக்காதரவு
கண்டிலேன், சருவ வல்ல மண்டலாதிபா!
Verse 3நேசமாய் ஏழைக்கிரங்கி, மோசம் அணுகாது காத்து
நித்தனே, எனைத் திருத்தி, வைத்தருள் புத்தி வருத்தி, — யேசு
Verse 4பேயுடைச் சிறையதிலும், காய வினைக் கேடதிலும்,
பின்னமாகச் சிக்குண்ட துர்க் கன்மி ஆயினேன்;
Verse 5தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்றுதிரம் விட்ட
தேவனே, எனைக்கண் நோக்கித் தீவினை அனைத்தும் நீக்கி, — யேசு
Verse 6சிறைப்படுத்தின வற்றைச் சிறையாக்கி விட்ட அதி
தீரமுள்ள எங்கள்உப கார வள்ளலே,
Verse 7குறை ஏதுனை அண்டினோர்க் கிறைவா? எனைச் சதிக்கும்
குற்றங்கள் அறவே தீர்த்து, முற்றுமுடியக் கண் பார்த்து, — யேசு
Verse 8பொல்லா உலகம் அதில் நல்லார் எவரும் இல்லை,
புண்ணியனே, உன் சரணம் நண்ணி அண்டினேன்;
Verse 9எல்லார்க்குள் எல்லாம்நீ அல்லோ எனக்குதவி?
இந்நாள் அருள் புரிந்து உன் ஆவியைச் சொரிந்து, — யேசு