Verse 1இயேசுவே நான் நீர் பட்ட
பாடும் வேதனையும்
கருத்தாய்த் தியானிக்க
உமதாவியையும்
பக்தியையும் தயவாய்
தந்தென் மீட்புக்காக
வதையுண்ட ரூபமாய்
என்முன் நிற்பீராக.
Verse 2நீரே பட்ட துயரம்
ரத்த வேர்வை கட்டு
கும்டுமிழ்நீர் தூஷணம்
வாரடி இக்கட்டு
சிலுவையின் மரணம்
பாடெல்லாவற்றையும்
அடியேனின் இதயம்
உற்றுப் பார்த்தசையும்.
Verse 3இந்தப் பாட்டைப் பார்ப்பதும்
அன்றி அதற்கான
காரணமும் பலனும்
ஏதேதென்று காண
உதவும்; என் பாவத்தை
அத்தால் தீர்த்துவிட்டீர்
எனக்காகக் கிருபை
நீர் அவதரித்தீர்.
Verse 4இயேசுவே நான் உத்தம
மனத்தாபமுற்று
தேவரீரை வாதித்தப்
பாவத்தை வெறுத்து
நீக்க எனக்கன்பினால்
துணை செய்து வாரும்
மீண்டும் உம்மைப் பாவத்தால்
வாதிக்காமல் காரும்.
Verse 5பாவம் மனச் சாட்சியைக்
குத்தி தீக்காடாக
எரியும் நரகத்தைக்
காட்டும்போதன்பாகத்
துணை நின்றென் நெஞ்சிலே
உம்மைப பற்றிப்கொள்ளும்
விசுவாசத்தை நீரே
தந்து திடன் சொல்லும்.
Verse 6நான் என் சிலுவையையும்
களிப்பாய்ச் சுமந்து
தாழ்மை பொறுமையையும்
உம்மால் கற்று வந்து
உம்மை பதில் நேசிக்க
உமவும்; நான் சொல்லும்
இத்துதிக் கும்முடைய
செவிசாய்த்துக் கொள்ளும்.