இயேசுவே நீர் தாழ்ந்தோரான
நாட்களில் கும்போடே நீர்
என்னால் நோயைத் தீர்ப்பதான
சத்து பாய்ந்தது என்றீர்.
இப்போதுன்னதத்தில் ஆளும்
இராஜாவான நீர் இந்நாளும்
சக்தியை என்பேரிலும்
பாயப்பண்ணியருளும்.
Verse 2
உமக்கதிகாரம் யாவும்
தரப்பட்டிருக்குதே;
தேவரீரை எந்த நாவும்
கர்த்தர் என்கவேண்டுமே
யாவும் உமக்குப் பணியும்
பெருமை எல்லாம் அழியும்
உம்மால் கடைசியிலே
சாவும் வெல்லப்படுமே.
Verse 3
ஆகையாலே தேவையான
மீட்பெப்போதும் உம்மாலாம்;
இதற்கு நீர் செய்ததான
அற்புதங்கள் சாட்சியாம்;
ஏனென்றால் அவரவர்க்கு
அநுகூலராவதற்கு மனிதரிடத்திலே
தயவாக வந்தீரே.
உம்முடைய வஸ்திரத்தின்
ஓரத்தைத் தொடுகிறேன்;
நீர் ரட்சிக்கிற பலத்தின்
சத்துவத்தை நம்புவேன்;
நீர் உரைத்ததைப் பிடிப்பேன்
உமக்கென்னை ஒப்புவிப்பேன்;
மீட்போம் என்று சொன்னீரே
மீட்டுக்கொள்ளும் இயேசுவே
Verse 6
ஆமேன் என் ஜெபத்தைக் கேட்பீர்
என்னை சுத்தம் பண்ணுவீர்;
என்னை நோக்கி என்னைச் சேர்ப்பீர்
தேற்றி அன்பைக் காண்பிப்பீர்
அத்தால் நித்த நித்தமாக
உமக்குப் புகழ்ச்சியாக
தோத்திரஞ் செலுத்துவேன்;
ஆமேன் ஆமேன் என்கிறேன்.