Verse 1இயேசுவே நீர்தாமே
என் மகிழ்ச்சியாமே
நீர் என் பூரிப்பு;
என் மனம் நாள்தோறும்
ஆசை வாஞ்சையோடும்
ஏங்குகின்றது.
கர்த்தரே உலகிலே
உம்மை யன்றி வாழ்விராது
இன்பமுங் காணாது.
Verse 2நல் மறைவின் கீழே
நான் ஒதுங்க நீரே
என் அரண்மனை;
சாத்தான் வர்மிக்கட்டும்
எதிரி சீறட்டும்
இயேசு என் துணை.
திகிலும் பயங்களும்
பாவ நரகக்கெடியும்
இயேசுவால் தணியும்.
Verse 3வலு சர்ப்பத்துக்கும்
சாவின் பற்களுக்கும்
நான் திடுக்கிடேன்.
லோகமே விரோதி;
நான் சங்கீதம் ஓதி
தோத்திரிக்கிறேன்.
தெய்வக்கை என் சலுகை;
இனி சாத்தான் கூட்டத்தார்கள்
மௌனம் அடைவார்கள்.
Verse 4பொக்கிஷங்கள் யாவும்
வீணும் விருதாவும்;
இயேசு என் கதி
லோகத்தார் இச்சிக்கும்
வாழ்வோர் குமிழிக்கும்
கானற்குஞ்சரி
அதை ஏன் தொடருவேன்
இயேசுவோடடைந்த தாழ்வு
பெரிதான வாழ்வு.
Verse 5லோகத்தின் மினுக்கே
நீ மகா அழுக்கே.
என்னைவிட்டுப் போ;
பாவங்களுடைய
தீழ்ப்பே நீ மறைய
வேளையாம்; இதோ
இச்சையே துன்மார்க்கமே
நீ எல்லாஞ் சமூலமாக
அற்றுப் போவாயாக.
Verse 6மனமே நீ ஆறு
பூரிப்பாகப் பாடு.
இயேசு சேர்ந்தாரே;
அத்தால் எந்தப் பாடும்
தித்திப்பாக மாறும்.
நான் உலகிலே
நிந்தையும் நிஷ்டூரமும்
உத்தரித்தும் இயேசுதாவே
என் மகிழ்ச்சியாமே.