Yesuve Neertham Jeeva Naal
Song: Yesuve Neertham Jeeva Naal
Verse 1இயேசுவே நீர்தாம்
ஜீவ நாள் எல்லாம்
மோட்சத்துக்கு சேருமட்டும்
கைதந்தெங்களை நடத்தும்!
நீர் முன்னாலே போம்
உம்மோடேகுவோம்.
Verse 2தீங்கு மிஞ்சினால்
எங்களை அன்பால்
கலங்காதபடி காரும்
நிலை நிற்கும் வரம் தாரும்
இங்கே சிலுவை
அங்கே மகிமை.
Verse 3சொந்த கிலேசமும்
நேசர் துன்பமும்
நெஞ்சை வாதித்தால் அன்பாக
பொறுமை அளிப்பீராக;
ஜீவ கிரீடத்தை
நோக்க நீர் துணை.
Verse 4நீர் இவ்வுலகில்
கஷ்ட வழியில்
எங்களை நடத்தினாலும்
ஆதரியும்; நாங்கள் மாளும்
போதும்மிடமே
சேரும் நேசரே.