Verse 1இயேசுவே உம்மை தியானித்தால்
உள்ளம் கனியுமே
கண்ணார உம்மைக் காணுங்கால்
பரமானந்தமே.
Verse 2மானிட மீட்பர் இயேசுவின்
சீர் நாமம் போலவே
இன் கீத நாதம் ஆய்ந்திடின்
உண்டோ இப்பாரிலே?
Verse 3நீர் நொறுங்குண்ட நெஞ்சுக்கு
நம்பிக்கை ஆகுவீர்
நீர் சாந்தமுள்ள மாந்தர்க்கு
சந்தோஷம் ஈகுவீர்.
Verse 4கேட்போர்க்கும் தேடுவோர்க்கும் நீர்
ஈவீர் எந்நன்மையும்
கண்டடைந்தோரின் பாக்கியசீர்
யார் சொல்ல முடியும்?
Verse 5இயேசுவின் அன்பை உணர்ந்து
மெய் பக்தர் அறிவார்
அவ்வன்பின் ஆழம் அளந்து
மற்றோர் அறிந்திடார்
Verse 6இயேசுவே எங்கள் முக்தியும்
பேரின்பமும் நீரே
இப்போதும் நித்திய காலமும்
நீர் எங்கள் மாட்சியே.