Yesuve Vazhi Sathyam Jeevan
Song: Yesuve Vazhi Sathyam Jeevan
Verse 1இயேசுவே வழி சத்தியம் ஜீவன்
இயேசுவே ஒளி நித்யம் தேவன்
Verse 2புது வாழ்வு எனக்கு தந்தார்
சமாதானம் நிறைவாய் அளித்தார்
பாவங்கள் யாவும் மன்னித்தார்
சாபங்கள் யாவும் தொலைத்தார்
Verse 3கல்வாரி மீதில் எனக்காய்
தம் உதிரம் சிந்தி மரித்தார்
மூன்றாம் நாளில் உயிர்த்தார்
உன்னதத்தில் அமர்ந்தார் – இயேசுவே
Verse 4நல் மேய்ப்பனாக காத்தார்
எனை தமையனாகக் கொண்டார்
என் நண்பனாக வந்தார்
என் தலைவனாக நின்றார்
Verse 5மேகங்கள் மீதில் ஓர்நாள்
மணவாளனாக வருவார்
என்னை அழைத்துக் கொள்வார்
வானில் கொண்டு செல்வார் – இயேசுவே
Verse 6உனக்காகத் தானே பிறந்தார்
உனக்காகத் தானே வளர்ந்தார்
உனக்காகத் தானே மரித்தார்
உனக்காகத் தானே உயிர்த்தார்
Verse 7இன்றும் என்றும் நமக்காய்
அவர் ராஜாவாக இருப்பார்
மார்பில் என்றும் அணைப்பார்
தூக்கி உன்னை சுமப்பார் – இயேசுவே