Verse 1இயேசுவே என் தெய்வமே
என்மேல் மனமிரங்கும்
Verse 2நான் பாவம் செய்தேன்
உம்மை நோகச் செய்தேன்
உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன்
என்னை மன்னியும் தெய்வமே (2)
Verse 3உம்மை மறுதலித்தேன்
பின் வாங்கிப் போனேன்
உம் வல்லமை இழந்தேனையா
என்னை மன்னியும் தெய்வமே
Verse 4முள்முடி தாங்கி
ஐயா காயப்பட்டீர்
நீர் எனக்காக பலியானீர்
உம் இரத்தத்தால் கழுவிவிடும்
Verse 5துன்ப வேளையிலே
மனம் துவண்டு போனேன்
உம்மை நினையாது தூரப்போனேன்
என்னை மன்னியும் தெய்வமே இந்த
ஒருவிசை மன்னியுமே
Verse 6அநியாயம் செய்தேன்
கடும் கோபம் கொண்டேன்
பிறர் வாழ்வைப் கெடுத்தேனையா
என்னை மன்னியும் தெய்வமே