Verse 1இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம்
எந்தனுக்காக சிந்தினீரே …. 2
கோரப்பாடுகள் யாவும் சகித்தீர்
அத்தனையும் எனக்காகவோ
Verse 2மா பாவியாம் என்னை நினைக்க
மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா
தேவ தூதரிலும் மகிபனாய்
என்னை மாற்றின அன்பை துதிப்பேன்
Verse 3என்மேல் பாராட்டின உமதன்புக்
கீடாய் என்ன நான் செய்திடுவேன்
நரகாக் கினையின் நின்று மீட்ட
சுத்த கிருபையை நித்தம் பாடுவேன்
மா பாவியாம்
Verse 4எந்தன் பாவங்கள் பாரச்சுமை போல்
தாங்கக் கூடாத மா பாரமே
மன்னிக்கும் தயை பெருத்த என் தேவா
மன்னித்தும் மறந்தும் தள்ளினீர்
மா பாவியாம்
Verse 5எந்தன் பாதங்கள் சறுக்கிடும் போது
வலக்கரத்தாலே தாங்குகிறீர்
மனபாரத்தால் சோர்ந்திடும் போது
ஜீவ வார்த்தையால் தேற்றுகிறீர்
மா பாவியாம்
Verse 6எனக்காக நீர் யாவும் முடித்தீர்
உமக்காக நான் என்ன செய்வேன்
எந்தன் ஜீவனுள்ள நாளெல்லாம் உம்
சிலுவை சுமந்து வருவேன்
மா பாவியாம