Verse 1ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு
உயர்ந்த மனிதனிலும் உயரமான அன்பு
அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு
விவரிக்க முடியாத அற்புத அன்பு
Verse 2இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு
புறம்பே தள்ளாத பூரண அன்பு
இது ஒப்பில்லாத அன்பு, பூரண அன்பு
Verse 3குழியில் விழுந்தோரை
குனிந்து தூக்கும் அன்பு
குப்பையில் இருப்போரை
எடுத்து நிறுத்தும் அன்பு
ஒடுக்கப்பட்டோரை உயிர்த்திடும் அன்பு
எந்தக் காலத்திலும் மாறாத அன்பு
Verse 4மனிதர்கள் மாறினாலும்
மாறிடாத அன்பு
மகனாய் ஏற்றுக்கொண்ட
மகா பெரிய அன்பு
என்னை மீட்பதற்காய் உலகத்திலே வந்து
தன்னையே தந்துவிட்ட தகப்பனின் அன்பு