Verse 1இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டேன் நான்
இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டேன்
எதற்கும் பயம் இல்லையே
இனியும் கவலை எனக்கில்லையே
அல்லேலூயா (4)
Verse 2இயேசுவுக்காய் அவமானம் ஏற்றுக் கொண்டேன்
இனிவரும் பலன் மேல் நோக்கமானேன்
அழிந்து போகும் பாராட்டு வேண்டாமே
அரவணைக்கும் இயேசு போதும் போதுமே
Verse 3அதிவிரைவில் நீங்கும் இந்த உபத்திரவம்
அதிகமான கனமகிமை உண்டாக்கும்
காண்கின்ற எல்லாமே அநித்தியம்
காணாதவைகளோ நித்தியம்
Verse 4பகைவர்க்கு அன்பு காட்டிடுவேன்
வெறுப்பவர்க்கு நன்மை செய்திடுவேன்
சபிப்பவர்க்கு ஆசி கூறிடுவேன்
தூற்றுவோருக்காக ஜெபித்திடுவேன்
Verse 5கர்த்தரையே முன்வைத்து ஓடுகிறேன்
கடும்புயல் வந்தாலும் அசைவதில்லை
எதையும் தாங்குவேன் இயேசுவுக்காய்
இனியும் சோர்ந்;து போவதே இல்லை
Verse 6ஆட்கொண்ட தேவனை நம்புகிறேன்
அவருக்குள் வேர் கொண்டு வளருகிறேன்
கோடைக்காலம் வந்தாலும் அச்சமில்லையே
வறட்சிக் காலம் வந்தாலும் கவலையில்லையே
Verse 7வேதத்தில் இன்பம் காண்கின்றேன்
விரும்பி தியானம் செய்கின்றேன்
வாய்க்காலில் நடப்பட்ட மரம் நான்
வாழ்க்கையெல்லாம் தவறாமல் கனி கொடுப்பேன்