Yesuvin Naamam Enithana Naamam
Song: Yesuvin Naamam Enithana Naamam
Verse 1இயேசுவின் நாமம் இனிதான நாமம்
இணையில்லா நாமம் இன்ப நாமம்
Verse 2பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்
பரம சந்தோஷஷம் பக்தருக்களிக்கும்.
Verse 3பரிமளத் தைலமாம் இயேசுவின் நாமம்
பாரெங்கும் வாசனை வீசிடும் நாமம்
Verse 4வானிலும் புவியிலும் மேலான நாமம்
வானாதி வானவர் இயேசுவின் நாமம்
Verse 5முழங்கால் யாவும் முடங்கிடும் நாமம்
மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம்
Verse 6சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்
சாபப் பிசாசைத் துரத்திடும் நாமம்