Verse 1இயேசுவின் நாமம் இன்ப நாமம்
வல்லமையுள்ள நாமம் - அந்த
நாமத்திலே துதி பாடிடுவோம் - 2
கன மகிமையை செலுத்திடுவோம்
Verse 2இயேசுவின் நாமமின்றி
வேறு நாமத்தில் மீட்பில்லையே
அந்த நாமத்திலே மண்ணோர் அனைவருமே
நாம் மண்டியிட்டு ஜெபிப்போமே
Verse 3மகிழ்ச்சிக் குரலெழுப்பி
மன்னன் இயேசுவில் மகிழ்ந்திடுவோம்
எக்காளத்தோடும் கைத்தாளதோடும்
நாம் ஆர்ப்பரித்துப் பாடிடுவோம்
Verse 4தாய் என்னை மறந்தாலும்
அவர் ஒருபோதும் மறக்கமாட்டார்
என்னை நினைத்துக் கொள்ள
என் நாமத்தையே
அவர் உள்ளங்கையில் பொறித்து உள்ளார்
Verse 5எக்காளம் முழங்கிடவே
வான மேகங்கள் நடுவினிலே - அவர்
மகிமை யோடும் வான தூதரோடும்
இயேசு இராஜாதி ராஜன் வருவாh