Verse 1இயேசுவின் பின்னால் நான் செல்வேன்
திரும்பி பார்க்க மாட்டேன்
சிலுவையே முன்னால்
உலகமே பின்னால்
இயேசு சிந்திய இரத்தத்தினாலே
என்றும் விடுதலையே
Verse 2உலகத்தின் பெருமை செல்வத்தின் பற்று
எல்லாம் உதறி விட்டேன்
உடல் பொருள் ஆவி உடைமைகள் யாவும்
ஒப்புக் கொடுத்து விட்டேன்
நான் அவர் ஆலயம் எனக்குள்ளே இயேசு
என்ன நடந்தாலும் எவ்வேளையிலும்
எப்போதும் துதித்திடுவேன்
Verse 3வேதனை நெருக்கம் இன்னல்கள் இடர்கள்
எதுவும் பிரிக்காது
வெற்றி வேந்தன் என் இயேசுவின் அன்பால்
முற்றிலும் ஜெயம் பெறுவேன்
நிகழ்கின்ற காலமோ வருகின்ற காலமோ
வாழ்வோ சாவோ வல்ல தூதரோ
பிரிக்கவே முடியாது
Verse 4அகிலமெங்கிலும் ஆண்டவன் இயேசு
ஆட்சி செய்திடணும்
ஆவியில் நிறைந்து சத்தியம் பேசும்
சபைகள் பெருகிடணும்
என் சொந்த தேசம் இயேசுவுக்கே
இயேசுதான் வழி என்கிற முழக்கம்
எங்கும் கேட்கணுமே
Verse 5பழையன கடந்தன் புதியன புகுந்தன
பரலோக குடிமகன் நான்
மறு