Verse 1எத்தனை நாவால் பாடுவேன்
என் மீட்பர் துதியை
என் ஆண்டவர் என் ராஜனின்
மேன்மை மகிமையை.
Verse 2பாவிக்கு உந்தன் நாமமோ
ஆரோக்கியம் ஜீவனாம்
பயமோ துக்க துன்பமோ
ஓட்டும் இன்கீதமாம்.
Verse 3உமது சத்தம் கேட்குங்கால்
மரித்தோர் ஜீவிப்பார்
புலம்பல் நீங்கும் பூரிப்பால்
நிர்ப்பாக்கியர் நம்புவார்.
Verse 4ஊமையோர் செவிடோர்களும்
அந்தகர் ஊனரும்
உம் மீட்பர் போற்றும் கேட்டிடும்
நோக்கும் குதித்திடும்.
Verse 5என் ஆண்டவா என் தெய்வமே
பூலோகம் எங்கணும்
பிரஸ்தாபிக்க உம் நாமமே
பேர் அருள் ஈந்திடும்.