Verse 1ஏதேனில் ஆதி மணம்
உண்டான நாளிலே
பிறந்த ஆசீர்வாதம்
மாறாதிருக்குமே.
Verse 2இப்போதும் பக்தியுள்ளோர்
விவாகம் தூய்மையாம்
மூவர் பிரசன்னமாவார்
மும்முறை வாழ்த்துண்டாம்.
Verse 3ஆதாமுக்கு ஏவாளை
கொடுத்த பிதாவே
இம்மாப்பிள்ளைக்கிப் பெண்ணை
கொடுக்க வாருமே.
Verse 4இரு தன்மையும் சேர்ந்த
கன்னியின் மைந்தனே
இவர்கள் இரு கையும்
இணைக்க வாருமே.
Verse 5மெய் மணவாளனான
தெய்வ குமாரர்க்கே
சபையாம் மனையாளை
ஜோடிக்கும் ஆவியே.
Verse 6நீரும் இந்நேரம் வந்து
இவ்விரு பேரையும்
இணைத்து அன்பாய் வாழ்த்தி
மெய்ப் பாக்கியம் ஈந்திடும்.
Verse 7கிறிஸ்துவின் பாரியோடே
எழும்பும் வரைக்கும்
எத்தீங்கில் நின்றும் காத்து
பேர் வாழ்வு ஈந்திடும்