Verse 1யோர்தான் விட்டேறி மனுஷ
குமாரன் ஜெபித்தார்;
வானின்றப்போதிறங்கின
புறா உருக் கண்டார்.
Verse 2நல்லாவி அபிஷேகமாய்
அவர்மேல் தங்கினார்
’என் நேச மைந்தன்’ என்பதாய்
பிதா விளம்பினார்.
Verse 3அவ்வாறு ஸ்நானத்தால் புது
பிறப்பை அடைந்தார்
மெய்த் தெய்வ புத்திரர் என்று
விஸ்வாசத்தால் காண்பார்.
Verse 4கபடில்லாப் புறாத் தன்மை
தரிக்கப்படுவார்
நல்லாவி தங்கள் உள்ளத்தை
நடத்தப் பெறுவார்.
Verse 5உம் ரத்த ஊற்றால் பாவத்தை
நீக்கின கிறிஸ்துவே
தூய்மையோரான தாசரை
தற்காத்துக் கொள்ளுமே.
Verse 6சீர்கெட்ட லோகம் மீட்டோரே
பிதா ஆவியையும்
உம்மோடு ஏகராகவே
என்றென்றும் துதிப்போம்.